பிம்பங்களில்
கடந்தகாலம் உமிழும்
விடுபட்ட நீட்சிகள்
சமராட
நிரம்பி
தொடர்புறுத்தும் கண்ணி!
ஆழம்
கப்பிக் கொள்ள
உறுத்தும் தன்னிரக்கம்
பிணக்குகளை
கிளறி ஆசுவாசப்பட
கிளறி ஆசுவாசப்பட
இன்னொரு இரவும்
தீர்ந்து போனது!
கழிவிறக்கமாய்
தான் எனும்
வலுப்பட்ட
முகமூடி
காறித்துப்பி
நாறும் சுயம்!
வாலாட்டி
கிடைக்காது போன
இரைத்துண்டுகள்
நிச்சயம்
சபிக்கப்பட்ட நாக்குகளில்
ருசியாகட்டும்
ஆமேன்!
சுய நலமின்றி
சாத்தியப்படாத
மனிதன் எனும்
ஒற்றைப்படை
தேடும் சுதந்திரம்
நிகழ்காலத்தை விரும்பாது
விழுந்து விட்ட பாழாய்
வேதனைகளின் சுகங்களை
நிரந்தரமாய்
மீட்டிக் கொள்ளட்டும்!

No comments:
Post a Comment