Thursday, 23 June 2016

கரு வளர்தல்


மூடி இருப்பவைகளின் பயங்கரமும் மர்ம தகிப்பும்
அதன் உட்கொள்ளுதலின் அடங்காத ஊசலாட்டமும்
அது ஜன்னலற்ற வீடுகளின் தாழ்வார ஓட்டை ரகசியம்
காட்டுத்தீ கழித்து போடும் மிச்ச சாம்பலின் எரு
மீட்டெடுக்கும் வாழ்வியலை உறிஞ்சிக் கொள்ளும்
வெட்டை மரம் இன்னும் எஞ்சியிருக்கும் தனிமையினை
சுவாசிக்க கற்றுக் கொண்டு உயிர் பற்றி மகரந்தம் கொளிக்கும்
எதிர்காலம் எனும் நம்பிக்கை தான்
விதைகளின் வீரியமாய் மூடிக்கொள்ளும் போது
காடுகளின் அழிவின்மையும் பிறப்பின்மையும்
ஒரு சேர ஊசலாடட்டும்

No comments:

Post a Comment