Wednesday, 8 June 2016

வாழ்வின் எல்லை


சலித்துக் கொண்டு
உரித்து
பகலின் ஆபாசத்தை
உமிழும் இரவில்
அனாயசமாய்
சாசுவதமான வாழ்வின்
சலித்த பக்கங்களில்
விட்டேத்தியாய்
அறியாமையாய்
மூழ்கடித்து
கேள்விகளெழுப்பி
பைத்தியங்கள்
தங்களின் சொந்த கனவுகளில்
சரசமாடும் யட்சிகளுக்கு
என்றென்றைக்குமான
தவிப்புகளில் அமிழும்
வாய்ப்புகளை விட்டுச் செல்லும்
அங்கு முழுமை பெறா
துண்டங்கள்
தனித்தனியான ஊசலாட்டத்தில்
பதிப்பிக்கும் ஒன்று
வாழ்வில் மட்டும் 
சுருங்குவதில்லை!

No comments:

Post a Comment