Thursday, 23 June 2016

சுயநலம்


சுகிக்கும் விண்மீன்
அனித்தியமாய் வானம்
தேய்பிறை நிலா
கருத்த இரவு
தேடல் எனக்கே எனக்கானதெனில்
நிச்சயம் பிளர்வுதான்

சதைப்பிண்டக் குவியலாய் மீனும்
காக்காயும் நாயும் பூனையும்
என் பசியும்

தப்பிக்க
ஊர்ஜிதப்படுத்த
பிழைக்கத் தெரிந்தது
என் நிஜமான பொய்

பதைபதைப்பின்
நீட்டிய கைகளுக்கு பின்னால்
துழாவும்
புறக்கணிப்பின் ஏளனம்

No comments:

Post a Comment