Thursday, 23 June 2016

பலி


தீராத பிரார்த்தனையாய்
சூடத்தின் அலையடிப்பில்
குருதி மொய்க்கும் !

சுடலை விழுங்க
குரல் வளை கிழித்த ஆடு
புழுக்கைகளால்
வஞ்சம் தீர்த்ததோ

ஆகாரமாய்
பசியெரிக்கும்
பிரசாதமாய்
இருளடைக்கும்
அகப்படா இருளில்
மெல்லத் துழாவும்
கரையும்
எரியும் பிரேதத்தின் மிச்ச புகை


கழுத்தறுக்கும்
கத்தி நுனியில்
ஆக்ரோசமாய் பீறிடும்
சுடலையின் இளைப்பாறல்

சிவக்கும் ரத்தத்தின்
ஊற்றுவாயில்
குத்தி நிற்கும் அகம்
கண்ணடைத்து வாய்பொத்தி

அறுந்த தலையும் கண்களும்
இன்னும் முடியா இருட்டும்
மோனமாய் எரியும் பிரேதமும்
ஊழ் திங்கும் காலமும்
மந்தகாசமாய்
எட்டடியில் மயான சுடலையும்

தன் வால் கடிக்கும்
சர்ப்பமாய்
ருசிக்கும் நாக்குகள்
விழுங்கும் அகாலம்

No comments:

Post a Comment