விரல்
பிடித்து
பின்னோக்கும்
நிழல்
படிமத்தில்
அம்மையும்
பிள்ளையுமாய்
பிரபஞ்சங்கள்
நகர்கின்றன
அவள்
என்பது
எப்படியும்
அம்மையாகிடுதல்
மட்டும்தான்
விரல்
தொடுகையில்
வலியிழந்து
கனவு
காணும்
பெரும்
பித்து
நிறைவடையா
கண்ணியில்
பிள்ளைகளால்
நிறைக்கும்
அனிச்சை
லீலை
தன்
குருதி
சொட்டிய
மொத்தமுமான
வெளியில்
அம்மைக்கானது
மொத்தமும்
தானே
வாழ்வென்பதன்
நித்தியம்
மூட்டும்
அழியாப்
பெருங்கனா
சகலமும்
உறிஞ்ச
வற்றா
பெருங்குருதி
சுரக்கும்
முடிவில்லா
முலைக்காம்பு

No comments:
Post a Comment