Wednesday, 8 June 2016

மரணம்


பிடி தளர்ந்து
உதறிக்கடந்ததின்
அலைகளில்
மூழ்கித் தவிக்கும்
உயிர்மை
தாகம் எனும்
வரம்பில்லா பிடியில்!

சதைத்துடிப்பிலோ
ஆண்மக் கூச்சலிலோ
இழந்து கொண்டிருந்த 
ஒன்று!

அமைதி
இரைச்சலிட்டு
விழுங்க
பிளர்ந்த நிலைப்பாடுகளின்
இருண்மை!

அழுது புரண்டு
மறக்கடிக்கப்படும்
கடந்த காலம்
துடித்தது....நின்று கலந்து விட்டது!

நிற்காத மூச்சு
மொன்னைத்தனமான
மௌனத்திடம்
பிழைத்து விடலாமென
கடைசி நம்பிக்கையில்
காறித் துப்பியது!

மொய்க்கும் 
அகம்
என்றும் 
இழக்கத் தயாரில்லாது

இருந்தும்

வாய் பிளந்து
அவி கேட்கிறது
மண்!

No comments:

Post a Comment