Wednesday, 8 June 2016

சுயவதை


உன்
மகிழ்வையும்
வேதனையும்
தாங்கிப்பிடிக்கும்
சிலுவையில்
குருதி கொப்பளித்து
பலியுண்டு கிடக்கிறது
என் சுயநலம்!

சாசுவதமான
அன்பு
நிர்கதியாய்
நிற்கையில்
நாம் 
காதலர்களாவோம்!

நீயும்
நானும்
என்ன்னுடையதும்
உன்னுடையதுமானதில்
நம் நிர்வாணம்
ஓலமிட்டது!

நீ 
எனும் தழுவலில்
மாசு மருவற்று
பல்லிளிக்கிறது
சுயம் எனும்
நான்

உன் 
வேர் தகிப்புற்று
உறிஞ்சும் 
நான்
நான்! நான்!
என வீண் ஜம்பம்!

சாபக்கிடக்கில்
அமைதியற்று
உறங்கும்
ராட்சச ஜீவனின்
கனவுகளில்
நீயும் நானும்
புணர்ந்து கொள்வோம்!

என் 
இறுதிச்சடங்கில்
உன்னுடைதை
அவிழ்த்து விடும் 
ஒன்று
உண்டெனில்
நிச்சயம் அது
நான் தான்!

உன் 
எச்சில் துளிகளில்
மந்திரிக்கப்பட்ட அகம்
மீளாது போன
காட்டு மிருகத்தின்
ஓலமாய்
இருளை
மீட்டிக்கொள்ளும்!

No comments:

Post a Comment