நோய் கக்கிக் கொண்டு
பீழை பிடித்து
வலுவில்லா இதயங்கள்
எதிர்காலத்தை நம்பி ஏமாந்து
நிர்கதியில்லாது
துடைத்தெறியப்பட்ட வாழ்நாளை
கசக்கிப் பிழிந்து
மிச்சங்களை உறிஞ்சி
உயிர் வாழ்தலில்
நம்மாலாகாத வேதனையை
நிச்சயம் அவன் தர மாட்டான்
இதயங்களின் பெருங்கருணையில்
நம்பிக்கையிழக்கா என் தேவனே!
எங்களின் பிரார்த்தனைகள்
உன் முன்னே மட்டுமே
சாத்தியப்படும்
ஆம்!
எங்களின் தெய்வம்
எங்களைப் போலவே
வலுவற்று
ஒட்டு மொத்த வேதனைகளின்
சொரூபமாய்!

No comments:
Post a Comment