யோனி
கிழித்து
வந்து
அறுபடும்
தொப்புள்
கொடியின்
வேட்கையில்
சுரந்த
பசி
விம்மி
மூச்சிறைத்து
எடு
எடு
என்றது
தாகம்
தாகமென்றது
விடுபடும்
நிகழ்காலம்
சென்று
பால்
சப்பியது
அடக்கும்
குருதி
நிறைத்த
பெருங்கனா
ஒற்றை
விந்துவை
தீர்த்துக்
கட்டுமா?
வான்
உந்தும்
குறி
பற்றிக்
கொண்ட
மண்
வெட்டையில்
நிரம்புவது
முலைகளும்
முகங்களும்
தகிக்கும்
கருவறையின்
மென்
மொட்டு
விரிந்திருந்து
விந்து
தேடும்
கண்களில்
கொற்றவையும்
மரியாளும்
பூமியம்மை
விழுங்கிய
அனல்
குளிர்ந்தும்
கனன்றும்
வான்
புணரும்
ஆதிக்கவர்ச்சியில்
நிறைவென்பதன்
மடியில்
அணைந்திருந்து
சப்ப
முலைகள்
ததும்பும்
பாலாழி
கனன்று
அயர்ந்து
வீங்கிப்
பெருத்து
தொய்து
பொருமிக்
கவர்ந்து
விடாது
இணங்கி
அணைந்து
முற்றிக்
கிளைத்து
கனத்து
விழுந்து
மக்கி
இருள்
இருள் என
நீங்காது
முடிவின்றி
உருளும்
மொத்தமும்
No comments:
Post a Comment