Wednesday, 8 June 2016

தஸ்தாவெய்ஸ்கிக்கு கடிதம்


சிலுவை சுமக்க ஆயத்தப்பட
துக்கங்களை பிச்சையெடுக்க
புண் ஒழுக்கும் சீழாய்
மனிதன் நிற்கும் கீழ்மையின்
விளிம்பு படியில்
சோகம் கப்பிக் கொண்டு
அணைக்கும் கிறுஸ்து
தன் புண்ணுக்கும்
இதயம் நாடும் மர்மம்
அழிகின்ற ஒவ்வொன்றும்
வசீகரிக்கும் விசித்திர முடிச்சுகளில்
நித்தியமாய்
ஆன்மா அம்மையைத் தேடுகையில்
வன்புணர்வுக்கும்
உடலில் வீழும்
எண்ணிலடங்கா
சர்ப்பங்கள் தன்னைத்தானே
விழுங்கும் காலவெளியில்
வெளிறிப் போன முகத்துடன்
மனிதனிடம்
கிறுஸ்துவை நாடி
அந்த மழை நனையும் இருள் குகையில்
நீ மட்டும் நிற்கின்றாய்!

No comments:

Post a Comment