உமிழும் எச்சம்
கொண்டு
முடிவற்ற
பெருங்காடு
பரப்பிக் கொண்ட
போதாமை!
கனவின் பிரங்ஜை
விரித்த
தூய உயிர்த்தன்மை
அலைக்கும் சிறகடிப்பு
அமர்ந்து
பறவைத்தன்மையானது!
கட்டுப்பாடின்மையை
விழுங்கிய சீர்மை
குலைக்கும்
போதங்கெட்டத்தனம்
கீழே பார்த்து
நகைத்துக் கொண்டிருக்க
குமிழிகளாய்
நான் நான் என
வெடிக்கும் தாகம்!
எல்லையின்மையைத்
தொடும்
ஒவ்வொரு
ஸ்பரிசமும்
நித்தியமாய்
பற்றிக்கொள்ள
சிறுதுண்டு பூமி!
பறவைமை
உந்திய வெப்ராளத்தில்
மந்தகாசமாய்
ஒலியெழுப்பி கவர்ந்து
அலைக்கழிக்கும்
இந்த பொய் வானம்!
No comments:
Post a Comment