Wednesday 7 September 2016

வசந்தம்


வெண் நீலத்துமி
தணுத்து
கலைகிறது
வியத்த நீள் வெளி
நாக்கு நீட்டி
குமைகிறது
குஞ்சுகளின் கீச்சிடல்
மக்கி மீழும் வாசனை
ரீங்காரமிட்டு
சர்ப்ப நெழிசலாய்
காலம் கீறி
வலுத்து
பிராண்டிப்
பீடிக்கிறது பச்சை!


Tuesday 6 September 2016

குறுக்கு வெட்டுக்கள்


ரணங்களில்
மங்கிய
மூடுபனி வாசலில்
ஒரு கடைசித்துளி
கால்களிடுக்கி சுடுகுழியில்
யோனி சிதைக்கும்
குறி
மூழ்கடிக்கும்
அலைப்பரப்பில்
முட்டையிட்டு
வெறுமனே
நகர்கிறது
அலைக்கழிதலின்
சாசுவதமான
ஆமை!

விந்தொழுக
நக்கிக் கொண்டிருந்தாள்
குதத்தில்
எச்சில் உமிழ்ந்தாள்
குறியை
விழுங்கித் துப்பினாள்
தீண்ட வெடித்தாள்
கிழிந்த யோனி சிலிர்க்க...

நெழியும் மலப்புழு
அழுகிச் செத்த நாய்
துடிக்கும் பல்லி வால்
சூடமிழா இறைச்சித் துண்டம்
முலைக்குருதி!


மங்கிய
பிம்பங்களில்
சேகரித்த
விசும்பின்
வெண் பழுப்பு நீர்மம்
அமிழ்த்தும்
ஸ்பரிச நெருடலில்
பிருஷ்டம் கிழிந்து
ஓடுகிறாள்
சொப்பனத்தின்
கரப்பான் விழி
உணர் கொம்புகள்
வழித்
தலைகீழாய்...

Friday 26 August 2016

நீ...


காலி
நிரப்பும்
கோப்பைத்துளிகளில்
ஒன்றிலிருந்து
ஒன்றைப் பிய்த்து
அவிழ்ந்து சொட்டும்
சதைச் சுழற்சியில்
நீலம் தோய்ந்து
அழுகும் பிணக்குவியலில்
சகத்தின் எரி
குதறிய துண்டங்களில்
காட்டுப்பச்சை
சுரக்கும் கலங்கலில்

திரளின்
ஒருமையில்
காட்டும்
கைத்தூண்டலில்
கனவின்
சாசுவதத்திலும்...




Friday 19 August 2016

மண்ணாலானது!


அல்குல்
விரித்து அனக்குது
புடவி!
தொப்புள்கொடி
பற்றி
நீண்டு
நின்று இணைந்தன
கால்கள்
பின்
துளியாகி
உன்னில்
சூனியக் காற்றாகுவேன்
இனி
தொப்புள்கொடி
அவசியமில்லை!

Friday 12 August 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 4



கலங்கமின்மையின்
ஆதியில்
படுத்துறங்குது
வானம்
நெகிழ்ந்து
நீலம் பாய்கையில்
என் நிர்வாணத்துணுக்கை
மட்டும்
அவிழ்த்து
வாய்ப்புணர சொல்வேன்
கட்டியம் கூறி
வராமல் நகரும்
மேகத்தின் கிழிந்த
கால் சிராயை
மாட்டிக்கொண்டு
தொழி புரண்டு
எக்கழிக்க

குறியைக் கடித்து
துப்பிற்று!

அந்தால...
சும்மா
மலந்து கெடக்காதட்டி
தேவடியா!


பாதம்


சவுட்டி தேய்ந்து
அழுகிப் பழுத்து
அழுக்கேறிப் பிய்ந்து
வெடித்துக்கோனி
விரல்களின்றி
மொன்னையாய்
சப்பிச் சூம்பி
வீங்கிப் பெருத்து
வெந்து பொருக்கோடி

கவனமின்றி....

கட்டாயப்படுத்திய
படுத்தா
நகர்தலுக்கும்!

காமம் காமம் காமம்



முதல் விந்து கொப்பளித்து
சன்னதமெடுக்கும்
அலகிலா விதைப்பெருக்கு
காலமின்றி 
வியர்த்த
பெண் நனைத்து
பெருகுது ஆகிறுதி
அந்த அத்தத்தின் சூட்டில்
தெறிக்கும் சுழி
சூனியத்தின் 
புள்ளிக் குத்தி
வானம் மூழ்கும் தொலைவினில்
நின்று
அறைக்கூவலிடும்
மண்ணே!

உன்னில் வேர் பற்றி
எம்பும்
துடிதுடிப்பில்
சொரூபம்! 

Thursday 4 August 2016

மரணத்தின் நாள்

சுடுகுழியில்
மலத்திய
ஆச்சியை!
எலும்புத்துண்டங்களாய்
மாமனை!
உப்பி வெடித்த
சித்தப்பனை!
அடர் பழுப்பு
சளிப்படலமாய்
தோழியை!

நறநறக்கும்
மயானச்சிதை

சொப்பன
நிசிக் காரிருளில்

துக்கம்
கண்ணீர்
கோபம்
உணர்
வன்மம்
ஏக்கம்
தாபம்
நெரிக்கும் துடி

சர்பத்தீண்டலாய்
நீலம் பாரித்து
அனக்கிறது!

Saturday 30 July 2016

வலியுதிர்காலம்


விடாயாய் 
விம்மி முழுங்குது
ஆகாசம்
ஆவியுதிர் காலமோ!

முட்டும் குறி
எம்பிப் பரப்புது
உயிர்த்துணுக்கை
இலையுதிர் காலமோ!

வலிச்சம் காட்டி
நகருது
மேகக்கூட்டம்

வலியுதிர்காலமோ!

உன்மையில் என்மை

உன்மையின்
மிதப்பில்
தவழ்கின்றன
என்மை!
கலியாலாகிக்
கணக்கும்
சுவாசம்!
உடுக்கைத்
துடித்து பற்றுகின்றன
அவிழ்ப்பை!
அங்கு
புலம்பும் மணல்கூறை
அள்ளி
அமிழ்த்துமாம்
நிறையாழி!




அனலாலானது


ஆழியை
மண்ணை
காற்றை
அந்தரத்தை
உடலத்தை
குருதியை
இருப்பை
தகிப்பை
கனப்பை
நிலையை
அசைவை
பிரம்மத்தை
மாயையை
முடிவில்லா சுருளை
ஆழத் தோண்டி
முகம் புதைக்கிறேன்
வெம்மை வெம்மை வெம்மை!

Thursday 28 July 2016

பால்யத்தின் மது

ஸ்பரிசங்களின்
கணநீர்க் கேணியில்
பிணைந்து குழையும்
சிருப்பத்தின் நிறை
கசிந்து ததும்பும்
பொத்து சிதறும்
அத்துவானத்தின் சுஷுப்தியில்
காலமில்லா பெருவெடிப்பில்
அசைவின்றி அணைந்து
கடித்து திங்கும்
நினைவின் படிமம்
தீண்டி
வெளிக்கும்
பிசுபிசுத்த உயிர்த்திரவம்!

Monday 25 July 2016

வலியின் கீர்த்தி


ஆகிறுதியில்
நிணம் தோய்த்து
ஊடுருவும் இருள்
பிரபஞ்சத்தின் தோலைக்கிழிக்கும்
உகிரிடமே...மன்றாடுகிறது!

விளிம்பினில்
குதத்தைக் குத்தி
பொடியாகின்றன மண்டையோடுகள்
அங்கு
ஆழியில் உப்புபொம்மையாய்
வெதும்பி நிற்கும்
வலியின்
ஒற்றை ஆன்மா!

கவிதைகள் நிதானமிழக்கின்றன!


திடூமென்று
வேர்கள் பிடுங்கின
குன்றுகள் பிளந்தன
சூறையால் பிண நாற்றம்
பறவைகளின் எச்சத்துளிகள்
காற்றின் தும்பினைக் கிழித்து
வீழ்கிறது
அணக்கமின்றி
காடு பிறாண்டிய துகள்கள்
மனிதத் தலைகளில்
தீக்கங்காய்
விரவிப்பாய்கிறது
மரணம்!
ஆழத்தின் வெட்டையில்
சூனிய விதைகளின்
உக்கிரம்
மோனத்தின் வாசலில்
கையேந்தி நிற்கையில்
ஓர்மையில் நழுவிய
ஒற்றைக் கனலில்
திரும்பவும்
மீட்டெடுக்கத் துடிக்கிறது
வசந்தம் தீண்டிய
நாக் கொதி!

Wednesday 20 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 3

நீர்த்துப்போன
காயங்களை வைத்து
சூதாடும் போதிலெல்லாம்
கோமாளிகள் இளிக்கின்றன!

அகத்தின் சாசுவதத்தில்
மூட்டைப்பூச்சிகள்
நசுங்க
நாற்றம் இல்லை இல்லை வாசனை!

விழுங்கும்
மிடறுகளில்
என்னை நிரப்பு...
மன்றாடுகிறான்
முகம் சிதைந்து கொண்டிருந்த
பால்ய நண்பன் இல்லை இல்லை எதிரி!

தோற்கடிக்கப்பட்ட
நம்பிக்கையிழந்த
தொலைந்து
மீளாது இன்னும் இன்னும்
மழுங்கடித்த
ஆளுமையின்
மிச்ச சொச்சங்களில்
காறி உமிழ்!

கார் உதிர் வசந்தம்
நின்று நின்று
நினைவுகளின் பிம்பத்தை
பூதக்கண்ணாடியில்
அழுத்திப்பிடிக்கிறேன்!

உன்னிடம் நான் என்பது
எப்பொழுதும்
நா...................ன்!

Sunday 17 July 2016

கடக்கையில்...

ஒரு
வெற்றுக்கை
நீட்டுகையிலெல்லாம்
மூஞ்சை திருப்பிக்கொள்ளலாம்
இல்லை என்று தலையாட்டலாம்
நிற்காது நகர்ந்து போகலாம்
செல்போனில் பேசலாம்
அசிங்கமாய் வெறிக்கலாம்
சில சில்லறைகளை வீசலாம்
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்
பரிதாபப்படலாம்
பொறாமைப்படலாம்
சிலக் கெட்ட வார்த்தைகள் உதிர்த்து
அறிவு ஜீவியாகாலாம்
நிச்சயம் நிச்சயமாக
உன் காலடியில்
துடித்துக்கொண்டிருக்கும்
அந்த அகங்காரத்திடம்
கதைக்க இயலாதுதானே?

ஆழ்மனதின் சில விசும்பல்கள் 1

சொப்பனத்தின்
இருள் வெளியில்
வன்மத்தில் பீடிக்கும்
அசைவின்மையின் ஊளை!
கழிப்பறை குளியலறைகளின்
முக்கில் வெறித்து
கூர் நோக்கும்
அகாலத்தின் விழி!
சுவாசம் இறைத்து
உயிர் குடிக்கும் காற்றிடம்
இறைஞ்சும் ஆன்மா!
உணர்வின் பிளத்தலில்
உடல் தின்று
சுகிக்க

தட்டி எழுப்புகிறது
என் நிதானமிழந்த
தொல்குடியின்
அரற்றி பிதுக்கும்
இந்த விசித்திரமான
ஜுரவேகம்!

Wednesday 13 July 2016

ஆதலால் உயிர்த்தெழவில்லை?



பொங்குமாத் திரையாழி
நுரையவிழ்த்து
கால்களை பற்றியிழுக்கையில்

பிரேதங்களின்
முகங்களில்

கார்
பிளந்து கொட்ட
ஸ்பரிசித்து
விசும்புகையில்

சூழ்
போர்த்தி
மயங்கும் அந்தியில்

எல்லைகளின்
விளிம்பு
உடைந்து
வெடிச்சாமானமாகுகையில்

குருட்டின்
ஒளியில்
பின் தொடரும்
தைரியத்தில்

உடலம்
அதிர்ந்து
ஊற்றெடுக்கும்
வலியில் வன்மத்தில்

ஆழம் கப்பிய
இருள்
அந்த பாதை தவறிய
ஆட்டிக்குட்டியிடம்
கேட்டது

"அவன்
உயிர்த்தெழாது
போய் விடில்..."

"உன் நம்பிக்கைக்கு
நான் ஒன்றும் செய்வதற்கில்லை
என்று பரிகாசமாய் இளித்தது
குட்டி!..."






சபிக்கப் (ஆசிர்வதிக்க) படுதல்


தனிமை
கொந்தளிக்கிறது
அணங்கு பீடித்து
நொடியும்
விட்டில் சிறகாய்
துர்மயமாய்
அனல் அலைக்கிறது
வயிறு கிழிய
வெட்டு இழுத்து
வாயில் கட்டை
பற்கள் பொடிகிறது
அழிமுகத்தில் முட்டி
எண்ணற்றதாய்
ஒற்றையாய்
ஒரு ஈன ஊளை
விசும்பைத் துளைக்கும்...

அங்கு
நமட்டும் மௌனத்தில்

சிதையேறத் துணியும்
அந்த ஒரு ஒற்றைத் துளியால்
தழும்பினால் தானே
பேராழி!

Wednesday 6 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள் 2



தலைகீழ்விகிதத்தில்
சுழியான மதிப்பில்
பணயம் வைத்து
இளிக்கின்ற ஓட்டைப்பல்
ஓட்டை உடைசல்
சாமானமாய்
கசண்டியான சொரித் தேகம்
அசை போடுகையில்
கணத்து
போதம் துடைத்தெறிய
தெறிக்கும் இருள்
அங்கு
என் அம்மையின் மனைவிகளின்
குறிகள்
சாடும்
செம்பழுப்பு நீர்மத்தில்
நகங்களால் குத்தி
இதயத்தை
கூழாக்குகையில்

மகிழ்வும் வாதையும்...


Tuesday 5 July 2016

குடிகாரனின் நாட்குறிப்புகள்



இடுப்பு போத்தல்
நழுவி
உடைந்து
மது வீச்சத்தில்...

தலையணை
நிரம்ப
சர்த்தித்து
முகம் புதைந்து
மூர்ச்சையடைந்து...

நாளைத்
தொடக்குகையில்
மண்டை பிசைந்து
நடுங்குகையில்
தன்னிரக்கத்தைக் கிழித்து
உட்புகுகையில்...

மலக்குழியில்
சாக்கடைத் தொழியில்
முச்சந்தியில்
மாடங்கோவில்
ஓலைப்பறைகளில்
பறக்கைங்கால் சக்கிளிச்சி வீட்டில்
என் பண்டிகைகளின்
கோலாகலங்கள்
உழலும் போது...

அப்பன்
கணவன்
அண்ணன்
தம்பி
மகன்
உறவுகளில்
விடுபட்டு
சமூகக் கூடுதலில்
கைகள் நடுக்கி
நரம்பு பின்னல்களில்
கழிவிறக்குகையில்...

என் பெண்ணின்
கல்யாணத்தன்று
புலியூர்குறிச்சி
மதகில்
மூர்ச்சையின்றி
தலைகீழாய்
கவிழ்ந்து
மண்டை முட்டி
பீறிட்டு,
அதுவரை பரிகாசப்படுத்திய
என் ஆன்மா விலகுகையில்
இன்னும் ஒரு மிடறு....
இருந்திருக்காதா?






Monday 4 July 2016

கவிதையின் ஏமாற்றம்


ஒவ்வொரு
உயிர்த்தெழுகையிலும்
மனிதத்தின்
சூம்பிய தேகத்தில்
கன்றிப் புடைத்தது!

தெரு முக்கில்
குடல் மலந்து
கூர் நகங்களில்
கிழிந்தது!

நடு நிசியின்
மோனத்தில்
சாக்கடை குழிகளில்
பறண்டியது!

ஆடியின்
உடை பிம்பங்களில்
நிழல் பற்றும் பொழுது
அலறியது!

என் விளிம்புகள்
உடைகையில் மட்டும்
அது
ஏமாற்றியது...

Sunday 3 July 2016

காத்திரம்




அன்பில் முத்தம்
கனவில் தாபம்
படிமங்களில் மோப்பம்
வெறுப்பில் எச்சில்
செயலில் வெறி
அறிவில் தவிப்பு
பிரிவில் செயலின்மை
தனிமையில் ஆன்மம்
அவிழ்ப்பில் நிர்வாணம்
கெஞ்சலில் குறுகலில்
தோல்வியின் நிகழ்போதாமையில்
பார்வையின் கூர்
சிறிதும் சிமிட்டுதலின்றி
வெறிக்கும் விழிப்பில்
குதத்தில் உமிழும்
உக்கிரம்!

Saturday 2 July 2016

ஓர்மை


ஒரு
வெற்று முழங்கை
நீட்டுகையில்
சுருக்குகள்
அவிழ்ந்து
சங்கு உடைத்து தொங்கிய
ஓர்மையுண்டு...

நிகழும் பெருங்கணக்கில்
அந்தத் துளி
உறைந்து கிடக்கும்
அது
கலையும் அந்தியில்
இருள் சூழ்கையில்
பதை பதைத்து
வழியும்...

அங்கு தவறாகும்
கணக்குகளும்
விடைகளும்!

கண்கள்



நிலவின் வெண் கொழுந்தோ
வானின் வெளி நீலமோ
விட்டில் பூச்சிகளுக்கும்
மண்ணுள்ளி புழுக்களுக்கும்
சூரியனின் அயர்ச்சியில்
வெந்து மடியும்
பிரவாகப் பேய் இருட்டினுள்
அசைவில்லாது
கணக்குகளிடும்
காலத்தின் மூடுபனியினில்

இருப்பினுள்
தூய்மையின் நிறைவில்
பரிதவிக்கும்
குழந்தைமை
புன்னகையும் அழுகையுமின்றி
திடுக்கிடுகையில்
அவன்(ள்)
கண்களை
வழி(லி)யறியாது தவிர்க்கிறேன்!




Wednesday 29 June 2016

அவள்

கூந்தல் பரப்பில்
தொங்கும்
ஊசலாட்டம்
ஒளிர்த்தும்
கசங்கிய வெளியினில்...
முதல்
கடைசியில்
தீண்டிச் சுழலும்
கனவுகளுக்கடியில்...
எதிர்ப்படும்
முகங்களிலெல்லாம்
தெறித்து சிதறும்.
நிலையின்றி
அலைவுறுத்தும்
பெயர்...

சுவாசம் உறிஞ்சி
நிரப்பும்
உயிர் வெற்று
ஊமைப் புலம்பலில்
அவிழ்த்து
சதைகளாய்
எறியும்
மாசற்ற
தழல் துளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
புழுத்துடிப்பு....
சிறு துண்டங்களாய்
அரிகையில்
உள்...வெளி...அந்தரம்...

கூர் நுனியில் வன்முறை
போதை வஸ்து
மயங்கிய குறுக்குவெட்டு
இல்லாமையில் நிறைவு
தூயதின் வெறுப்புமிழ்வு
அகால புகலிடம்
சாட்சியின் தன்னிரக்கம்
சுகங்களின் சமர்
சுயத்தின் ஒட்டுண்ணி
காட்சியில் வெளி
கலையும் மேகப்பூச்சு
புவியின் ஈர்ப்பு!




















Monday 27 June 2016

இறந்தவனின் இதயம்


படிமங்களின்
இதயக்கூட்டில்
அலைக்களிப்பின் துடிப்பில்
மீட்டு செல்லும் 
துணுக்கு பொதுக்கல்களில்
நீ....
அகாலமெனும் 
சீர்மையின்
வெளிச்சமில்லா நரம்புகள்
காற்றின் தீராப்பக்கங்களில்
சிராய்க்கும் இலைக்கணுக்களில்
வடிவமின்றி
ஒருமையை நாடும்
மறைத்து வைத்திருக்கும்
நெரிசலில் 
துடிக்கும்
நீ...
வீரியமின்றி 
கனத்து தொங்கும்
விதைக்கொட்டையாய்
புண்ணின் பழுத்த
நாற்றமடிக்கும் வீச்சமாய்
விடாப்பிடியின்றி
நழுவும்
போதையில்
அமிழ்ந்து அடங்கிக் கொள்ளும்
துண்டுபட்டு 
ஒழுக்கும் சழுவைகளில்
மாமிசச் சளியாய்
உன்னில் நினைவுறுத்துகையில்
கருகிய வெளியில்
என்னிலும் நீ... 

Friday 24 June 2016

பிரக்ஞை

உயிருள்ள
ஒன்றை நான் தேடிக்கொண்டிருக்கும் போது
இன்னும் இறக்கா ஒன்றின்
மூலை இருளாய்
வானத்து முடுக்குகளும்
இருளை மறக்கடிக்க...

வாய்ப்பிழக்கா...

மிகப் பிரக்ஞையான ஒன்றின் இருப்பில்
இன்னும் நான் சுழன்று கொண்டிடுக்கிறேன்
என்பதை நம்பும் பொழுது
நாம் "மனிதமாகிறோம்"!

அலையடிப்பு

ஒன்று
அடுத்து
மிதந்து
மூழ்கி
கரைந்து

யார்?
ஆம்! நான் தான்....
கரையில்!!!

Thursday 23 June 2016

புழுவெட்டிகள்




மனிதன் தோண்டி புதைக்கும்
மேற்பக்க பிதுக்கலின்
பைத்தியக்காரத்தனம் அசையவும்
அசையாது கடிக்கவும்
கீழ்ப்பக்கம் இன்னும் எந்திரிக்கவில்லை
அது தன் உறக்கத்தின் ஓர் கனவில் பாடும் பாடல்
ஒ! மனிதா
நீ வாரிக்கொள்
தள்ளியதை வென்றெடு
சீரிய எதிர்நோக்கில்
காற்றின் சீரமைவில் பயணத்தை முடுக்கு விடு
கழிந்தவைகளை உரசிப் பற்றி எரி
அந்த நகர்வின் மானத்தை காப்பாற்று
உள்ளே தேங்கிய என் கடலின் நுரைகளை மட்டும்
அப்படியே விட்டு விடு
அது உனக்கல்ல”

நமைச்சல்


செத்துப் போன தன்மைகளின்
நமைச்சலை சொரிந்து கொண்ட ஒரு அந்திம ராத்திரி
நிசப்தத்தில் நின்றிருந்த என் கனவுகளின் ஒன்றில்
இளஞ்சூட்டு வெளிச்சத்தில் என் தோண்டி எடுத்த
பழைய பிறக்காத உணர்ச்சி பிதுக்கல்களை கண்டேன்
தகிப்பின் வெறி வெளிக்கொணர்ந்த ஒன்றில்
அன்று மூழ்கி செத்து போனது ஒன்று
மழைவில்லில் நனைந்த உச்சி பகல் பொழுதில்
செருக்குடன் உற்றுப்பார்த்த
எண்ணப்பேராவலில் கிளர்ந்தெழும்
என் ரகசியங்களை திறந்த சமயம்
காற்றின் இரைச்சலில் கலந்து போனது ஒன்று
ஆதியாய் நான் வாசித்த
என் நரம்புகளில் பீறிட்ட இசைப்பொதுக்கல்களில் இன்னும்
இன்னும் என்னிடம் கிடைக்கா ஒன்றின்
எஞ்சிய ஓட்டின் உள் பக்க வெளியில்
தகித்து கொண்டிருந்த என் ஏளனப்பார்வையின்
மௌன வ்யாக்கானங்களை இழுத்தெடுத்த போது
செத்தது ஒன்று
ஏதும் கிடைக்கா பசியின்
ஏக்கமிக்க அலட்சிய கண்களில்
நாள் தொட்டு வளர்த்த
என் அங்கலாய்ப்பின் மூட்டையை அவிழ்த்து ரசித்துக் கொண்டு
இன்னும் கிடைக்கா என் தீனியின் கனவில்
மூர்ச்சையற்று உறங்கியதும் செத்து போனது ஒன்று
என்னோடு படர்ந்து வளர்ந்து
கட்டுப்பாட்டின் வெளிக்கொணர்வில்
தன்னை மூழ்கடித்து வாய் கடித்து
தன் கணப்பின் ஆங்காரத்தை அடைத்து
முளைக்க வழியில்லா நிலத்தின்
வெறுமையின் பகட்டை என்னிடம் கொணர்ந்த போது
செத்து போனது ஒன்று
அழிவின் கடைசி தினத்தில்
நான் பாதுகாத்த என் சொந்த தன் முனைப்பை
பகிர்ந்து கொள்ள தைரியமில்லா என் அடிமைத்தனத்தின்
ஒரே சுதந்திரத்தை நான் பறி கொடுத்த போது
செத்தது ஒன்று
இன்னும் பேராவலில் இரைச்சலில்
மௌனத்தில் கடுகடுப்பில்
வன்மத்தில் அழிவின் உற்று நோக்குதலில்
கை பிசைந்து நிற்கும் அவலை பசி நீங்காத வரை
தீராத நமைச்சல் எனக்கு!

மூளித் தேவதை


காணல்

செத்து போனது தலை சம்மாட்டில் ரசித்துக் கொண்டிருந்தது
இருட்டடிப்பு நடந்திருந்த உள் வெதும்பலை சோபை செய்யாது
நினைவு அவள் முந்தானை நறுமணத்தில் ஏங்கி கொண்டிருக்க
தவறி விழ வழியுண்டா என பிரஞ்சையில்லாது குழி தேடியது
தள்ளாட்டத்தில் கள்ளூற தலைக்கேறிய மாய போதை
இல்லாததில் இருப்பதை பிடித்து கொள்ளும் சுயம்
கட்டுப்படா வலிமையுணர்ச்சி சத்தமிட்டது
அது காது நுனிகளின் நக்குதலுக்கு ஆழப்பட்டிருந்தது
உச்சி வரை கலங்கடிக்கும்
அசையும் எல்லா இருப்புகளும் பொதிந்து வைத்த அழகு
அழகை எண்ணுதலில் தோற்கடிக்கப்படும்
எல்லா பிறவிகளுக்கும் சேர்த்து மொத்தமாய் உறிஞ்சி விடும்
அந்தியமில்ல்லா பார்வையில் தீர்ந்து சொட்டு சொட்டாய்
வெதும்பி கிளம்பும் என் வெக்கை
பிறக்க வழி தேடும் தவித்தலை அவள் வருகையின் கால் பதிவில்
ஆதிகாலம் உருண்டையாய் கைகளில் சிக்கிய பெருமிதம்
ரத்தப்படலமாய் அவள் உதட்டு நுனிகளில்
கனவாய் புகை மூட்டமாய் கலைந்து கொண்டிருந்தது விடியல்!

விளித்தல்

கூர்மையாய் இன்னும் காணாது
கண்கள் காட்டாற்று வெள்ளமாய் தள்ளும் இழுப்புகளில்
எட்டி மிதிக்கும் பயம் தொண்டையடைப்பில் உருள
அழைப்பு
ஜென்மம் மறந்து புதுப்பிறப்பின் முதல் வழிதேடல்
அவள் கால் பெருவிரல் நுனி என் நெற்றியை அழுத்த
பேரண்ட சாம்பலாய் நான் கரையும்
மின்னல் கீற்றாய் மறைந்ததுமுதல் முத்தம்
 

புணர்தல்

மேகம் உட்கவரும் பனிவெள்ளம்
கருத்த மேடாய் வெடிக்கத் துடிப்பதாய்
நான் மறைய அவள் வெளிப்படத் துடித்தாள்
துளி கிளறும் பின் உட்கொண்டு எச்சமாய் துப்பும்
இலக்கு தாண்டும் உடல் நிலைபெறாது உருக
நரம்புகளின் ரீங்காரக் குருதியோட்டம்
கிழிக்க கொப்பளித்தது என் மழை
இருட்டுக் காட்டில் உடைந்து சிதறுண்ட
வானத்தின் எல்லா மூலைகளையும்
இன்றாக நீலத்தில் நிலைப்பேற்றுவதில்
அணைந்தது தீச்சுடர் முதல் இருட்டு
 

திருவிழா


பலூனிலும் காத்தாடியிலும்
கைவளைகளிலும் ஐஸ் வண்டியிலும்
இன்னும் காற்றேற்றி சுழன்று
கூவிக் கூவி அலைக்கழிந்தது விண்மீனற்ற இரவு