Thursday, 4 August 2016

மரணத்தின் நாள்

சுடுகுழியில்
மலத்திய
ஆச்சியை!
எலும்புத்துண்டங்களாய்
மாமனை!
உப்பி வெடித்த
சித்தப்பனை!
அடர் பழுப்பு
சளிப்படலமாய்
தோழியை!

நறநறக்கும்
மயானச்சிதை

சொப்பன
நிசிக் காரிருளில்

துக்கம்
கண்ணீர்
கோபம்
உணர்
வன்மம்
ஏக்கம்
தாபம்
நெரிக்கும் துடி

சர்பத்தீண்டலாய்
நீலம் பாரித்து
அனக்கிறது!

No comments:

Post a Comment