கலங்கமின்மையை
அவிழ்த்தெடுத்து
பொழியும்
பெருமூச்சு நிலைத்துகள்களாய்!
அசைவமின்மை
உந்தித்தள்ள
பரிமாற்ற
நித்தியமான
ரகசியங்கள்!
தன்னுள் தானே
மீட்டிக் கொள்ள
நுழைவாயில் பொத்து
சூனியவெளி பிதுக்கும்
அந்திமம்
உறுதியாய் நிலைகொள்ள
மாறிக் கொண்டிருந்தது!
அழிவின்மை
உந்திய குறி
பெருங்குழியின்
திரை விலக்கிகையில்
மூச்சு முட்டி விலகி
தன்னுள் பொதிய
மாபெரும் பயத்தின்
அமைதி!
தனித்திருக்கும்
அமைதியின்மை
சுரக்கும்
ஆக்ரோசம்
கழிவிறக்கமாய்
தான்...
உற்று நோக்க
நிலைப்பு!
பொங்கும் முலை
ததும்பி
நிறைவின்மையை
நிரப்பி
பெருகும் ஓட்டத்தில்
அம்மை
நிலைத்ததாய்!

No comments:
Post a Comment