Wednesday, 8 June 2016

வாதை


சபித்துக் கொண்டு
பிரேதக்களை படிந்து
நாளையின்
வேதனைகளை துருவிக்கொள்ளும்
சாத்தானுடன் புணர்ந்த நாள் முதல்
கட்டவிழ்க்கப்பட்ட காலங்களில்
தூக்கியெறியப்பட்ட
தனக்கான விதையில்
எஞ்சிய நம்பிக்கையைத்
தேடி அலுத்துக் கொள்ளும்
நியாயம் கற்பிக்கும் 
மூர்க்கமான
வாழ்வியல் நோக்குகளை
ஆழம் கப்பிய தெளிவில்லா விசும்பிலும்
இருளின் நீண்ட அமைதியிலும்
ஓலமின்றி நிசப்தமாய்
அறையும் நெருடலிலும்
குத்திட்டு நிற்கும்
பார்வையில் 
அங்கலாய்த்து அலைக்கழிக்கும்
வாழ்வியல்
சலித்துப் போன பாதைகளில்
தள்ளி விடப்பட்ட
அகாலமான பெரும் பாழில்
காலத்தால் வெட்டப்பட்ட சிறகுகளை
பறத்தி வீழ்ந்து
துடித்துக் கொண்டிருக்க
நாற்றம் பிடித்த மனிதமோ
பாழின் 
நிரந்தரமான மலக்குழியில்....

No comments:

Post a Comment