Tuesday, 7 June 2016

நிர்வாணம்


உடுக்கை 
அவிழ்த்து எழும்
அதிர்கின்ற சுகந்தம்
தொட்டெழுப்பும் நுனி
விகாரம் அமிழ்த்திய 
இன்னொன்றிலும்...

பிண்டமாய்
தொலி போர்த்தி
நகரும் பொருண்மை

மெய்மை உணர்தலில்
இன்னொரு பிண்டத்திடம்
நிச்சயம்
மண்டியிடும்!

நிலைத்தன்மை 
உருக்க
அனல் கக்கிப்
பரவுமோ
இந்த நிர்வாண சாசுவதம்!

புணர்வு
சாத்தியமாக்கப்பட்டது
நிர்வாண உயிர்களுக்கானதாய்!

கழிவறையிலும்
பிணவறையிலும்
நிர்வாணங்கள்
பேணப்படுதல்தான்
ஒட்டுமொத்த வடிகால்!

நிர்வாணமாக்கப்பட்டதன்
நோக்கம் வேண்டுமா?
ஆடியில்
துடிக்கும்
உன் குறியைப்பார்!

No comments:

Post a Comment