வன்புணரும்
துரத்தும்
ஓடும்
ஏகாந்தமின்மையின்
வெறுமையில்
அழிவற்றதன்
அவமதிப்பில்
இல்லையில்லையென
அங்கலாய்ப்பில்
தாழ்வில்
மிச்சம்
மிச்சம்
சக்கை
சக்கை என
தன்னுள்
தானே
குறுகும்
மொத்தமும்
கூர்ந்து
அடிமைப்படும்
சமநிலையின்மையில்
தேடுவது
வலத்தில்
கட்டுண்டு
தாவும்
இடம்
அம்மையில்
அம்மையை
அம்மைக்காய்
தாவும்
நிரந்தரமற்ற
குழந்தைமை
ஜீவன்
புகும்
மரணமில்லா
மீட்சி
கொணர்ந்தெழும்
கதகதப்பின்
இன்ப
வலி
வசமில்லா
வானத்தில்
தொங்கும்
சூரியன்
விண்மீனிடம்
பணிந்த
கருமை
அலைக்கழிக்கும்
சபலத்தில்
நெஞ்சு
தட்டி
உறக்காட்ட
அடர்
வனப்பில்
மூழ்கி
கிடக்கும்
அனந்தம்
ஈரத்தில்
பொதிந்த
மாமிசம்
இடைவிடாது
துடித்தது
அவள்
அவள்!
பின்
நான் நான்?
நாக்கு
ஏங்கும்
உடல்
கடிக்கும்
ருசி
அவள்
என்று
முடிவில்லா!
இல்லாத
அது
அங்கில்லை
எனக்
காற்றில்
ததும்பி
வெளிக்கொணர்ந்த
கானம்
பெருங்கனா
கொய்யும்
கசிந்த
தீரா
குருதி
கேட்டது
இருள்
எனும்
பேரவா
No comments:
Post a Comment