தொடுதலில்
நுகர்தலில்
புணர்தலில்
தேடிக்
கொண்டிருக்கும்
கசப்பென்பது
ஊற்றெடுக்கும்
மானுடத்தின்
பாம்புப்
பின்னலாய்
மனம்
எனும்
நுகர்பொருள்
கட்டுடைந்து
பீறிட்டெழும்
ஆடிபிம்பங்களின்
அசைவிழக்காத
மூழ்கி
கரைந்து
இனித்திடும்
ஒற்றை
மனிதமென்பதில்
நிழல்கள்
அண்டி
வாழ
கசப்பென்பதன்
மணம்
சற்று
தூக்கல்
தான்
No comments:
Post a Comment