விட்டு செல்வது
நிச்சயம்
என்னுடையதில்லை
நான் என்பது
நினைவுகளின் பொதுக்கல்களில்
அழிந்து விடக் காத்திருந்த கிருமி போல
இல்லை! இல்லை!
எனக்குள் நானே
உறிஞ்சிக் கொள்ள
கட்டமைக்கப் பட்டதோ?
இல்லை! இல்லை!
நெருங்கும் மரணம்
தவியாய் தவித்து
இன்னார் இன்னார் என
பிரங்க்ஜை துளிர்க்க
போராடுகையில்
அவிழ்ந்துவிடும் சுதந்திரம்
தலைவிரி கோலமாய்
தனக்கான அடிமைகளைத்
தேடிப்பிடித்து
மூத்திரம் பெய்யவும்
மலம் கழிக்கவும்
அவர்கள் வாயைக்
கண்டறிந்த பொழுது
இல்லை! இல்லை!
எனக்கானதாக
நான் எனக்கென்றே
விட்டுச் செல்வது?
சுவை தேட
வலியறிய
உணர்விழக்க
மௌனங்களில் கட்டவிழ்க்க
உந்தி வெளித்தள்ள
சக்தியின்றி மோனமாய்
உச்சபட்ச போதையில்
சுதந்திரமாய்
என் சொந்த பிம்பத்தில்
காறித்துப்பிய
அந்த
எச்சில் துகள்கள்தானோ?
No comments:
Post a Comment