கத்தி
உள் நோக்கும்
இருண்மை
வெளியறியாது
வியாபித்து நிற்கும்
வெறுமையின் பிடியில்
தள்ளப்படுகையில்
தோற்கவிடாது உந்தும்
குறி துடிப்பது
அழிவில்லா
வாழ்வையும்
நுணுக்கங்களில் பேணிக்காக்கும்
நான் எனும் பிம்பத்தையும்
இருந்தும்
தனித்து விடப்பட்ட
காட்டில்
காவின்றி வெறிக்கும்
யட்சியிடம்
மிச்சமின்றி அறுத்துகொடுத்தது
எஞ்சியிருந்த
குருதியையும்!
No comments:
Post a Comment