நித்தியமான
கருமையினுள்
என் சுயம்
அடை காப்பது
நான் எனும்
மாசு மருவற்ற
பயம்!
விண்மீன்களின்
தகித்த சிறகு
மினுமினுத்தியது
நிச்சியமில்லா
அழைப்புகளின்
நீசத்தனமான
கருமை!
தனிமை
புகுத்துவது
தன்னிலையில்லா
இருளின்
கணப்பு!
மேகவாய்
பிளந்து
உட்கிரகிப்பது
அலையடித்த
வெள்ளை நுரை
கரைக்கும்
என் சொந்த காலடிகளை!
அக்னிப் பிழம்பின்
கடைசித்துளி
சிவப்பும் குடித்து
மண்டையோடுகள் போர்த்தி
நாக்கு தொங்க
மாகாளியாய்
கருமை!

No comments:
Post a Comment