Wednesday, 8 June 2016

கட்டுப்படா எதிர்காலம்


இணக்கமான
நம்பிக்கை என்பது
எனக்கும் எனக்குமானதான
போராட்டங்களில்
என்னுடையதை நானே தோற்கடித்து
வேதனைகளின் அளவீடுகளை
நினைத்து மகிழ்ச்சியுறும்
பொழுதுகளில்
எதிர்பார்த்து காத்திருக்கும்
அந்தரங்கமான
உணர்வுகள் பிதுக்கி
வெளித்தள்ளும் சுயம்
நாளை என்பதில்
தேடிக் கிடைக்க
வழி தெரியாது
பனிக்குடம் உடைந்து
கசியும் உயிர் நீரை
மூத்திரம் என 
வெறுமனே மல்லாந்துக்
கிடக்கும்
அம்மையைப் போல
கணங்களின் மாறுதல்களை
அப்படியே கடந்து செல்வதில்
நா ளை எப்படியும்
பைத்தியம் பிடிக்கும்
காலமாகி விடுமோ?

No comments:

Post a Comment