சாத்தியப்படுதலிலும்
எனக்கானதென சேமிக்க
நிறைவின்மையை
உறுதிப்படுத்தும் பொழுது!
எல்லையின்மையின்
துளியில்
வகுக்க எனக்கான
எல்லையைத்
தேடும் பொழுது!
கரையும்
நொடித்துளிகளின்
கட்டுப்பாடின்மையில்
எதிர்காலத்தின்
'நிச்சயமின்மை
பரிகசிக்கும் பொழுது!
உணர்வின் முடிச்சுகளில்
சுயம் வகுக்கும்
நிம்மதியில்
மரணம் தீர்மானிக்கும்
அலைக்கழிப்பில்!
தனிமை
சுவீகரிக்கும்
"நான்"
என
நானே நம்பும் பொழுது!
வலுத்துக் கிடக்கும்
அழுத்தம்
நிராகரிக்கும்
பொழுதுகள்
என்றைக்குமானதாய்
அசை போடும் பொழுது!
வலியின்
சிறு துகளிலும்
உடையும்
உடையும்
நெகிழும்
முட்டிக் கொண்டு
ஆசுவாசப்படும்
நிரூபித்துக்கொள்ள
எப்பொழுதும்
ஆயத்தப்படும்
நிச்சயமற்றதில்
நிச்சயமற்றதில்
நம்பிக்கையிழந்து...
இருப்பினும்
உறக்காட்டும்
அனித்தியத்தில்
நாளையை
ஒப்படைத்திடும்
திருப்தியின்மையெனும்
"நான்"!

No comments:
Post a Comment