Thursday, 23 June 2016

கவிதை



தெளிவில்லா
கரணங்களை
தீட்டிக் கொள்ளும்
மொன்னைக் கத்தி
கிழித்து
சிறு துளி குருதி

உவகை மேலிடும்
நிச்சயமானது
சூழ்ந்து கொண்ட
நொடி வெறுமை

சிதறும்
ஒளிக்குவியல்
கட்டவிழ்த்த
காலமின்மையெனும்
உடைந்த குவியாடி

தன்னிரக்கம்
மீட்டி
தந்தியறுக்கும்
அபஸ்வரம்

எல்லையின்மையில்
முட்டி
திகைக்கும்
அழியாப் புகழ்

இருந்தும்

பூமி
தொங்குவதோ
வானத்துக்கும்
வானத்துக்குமான
பயண
இடைவெளியில்

No comments:

Post a Comment