Wednesday, 8 June 2016

கொதி


எச்சில் ததும்பி
எதிர்பார்க்கும்
என்னுடையது
இறுக்க கப்பிக் கொண்டு
சொப்பனங்களாய்
இல்லாமையில் குதித்து
நாளையை விற்றுக் கொண்டிருந்தது!

அடர்த்தியாய் முடிவிலி
கிளர்த்தும் கவர்ச்சி
மாமிச வரையறுப்பில்
பாயும் நான்
அங்கிங்கெனாதபடி
மோப்பம் பிடிப்பது
நித்தியமாய் தீண்டுவது
அவளாகிய ஸ்பரிசம்!

நான் என்பதும்
என்ன்னுடையதாய்
அடைவதும்
நொடித்துளி அனிச்சையாய்
கரையும்
சொட்டு உயிரணு!

பால்யம்
நாக்கு நீட்டி
தீண்டி
புதைக்கும் விதை
ஆண்மமாய்
வியத்து நோக்கும்
மொத்தமும்
அவள் அவள் அவள்!

அனிச்சையாய்
நிறைக்கும்
திருப்தியின்மையெனும்
வெளியில்
கொதி பிடித்த
புது சந்ததிகளாய்
மனிதம்!

தீராத கருவறைக் கொதி
பெருங்கருணையில்
நிறைத்து
பஸ்மமாகி
குழந்தைமை விடுவிக்கும்
அடங்கா லீலை!

No comments:

Post a Comment